மருத்துவமனையை முற்றுகையிட்ட மாற்றத்திறனாளிகள்

84பார்த்தது
மருத்துவமனையை முற்றுகையிட்ட மாற்றத்திறனாளிகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மாற்றுத்திறனாளி ஆகாரம் பழனி என்பவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி இன்று(அக்.01) ஆரணி அரசு மருத்துவமனையை 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் ஆரணி அரசு மருத்துவமனை முன்பு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பரபரப்பு நிலவி வருகின்றது.

தொடர்புடைய செய்தி