கனடாவில் இந்து கோவிலில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோன்று இந்திய தூதர்களை மிரட்டும் செயல்கள் கோழைத்தனமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனேடிய அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.