திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக கடந்த சில தினங்களுக்கு துவங்கியது. மங்கள இசை, வாஸ்து சாந்தி விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், கணபதி ஹோமம், கோ பூஜை, கோபுர கலச ஸ்தாபம், புதிய விக்கிரகங்கள் கண் திறப்பு முதல் கால யாக பூஜையும், வேதிகார்ச்சனை,
பூர்ணாகுதி, எந்திர ஸ்தாபனம் நடைப்பெற்றது. இந்த நிலையில் 24-ம் தேதி (திங்கள்கிழமை) இன்று பிம்பசுத்தி, ரக்சாபந்தனமும், திருக்குடங்கள் புறப்பாடு நிகழ்வும், விநாயகர் கோபுர விமானம் கும்பாபிஷேக நிகழ்வும், மூலவர் செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பல்வேறு புண்ணிய தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றபட்ட பின் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து தீபாராதனை, தச தரிசனம், அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்