உடுமலை ; பிரதான சாலையில் வெள்ளப்பெருக்கு மக்கள் அவதி

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் வாகத் தொழுவு பகுதியில் தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது இந்த பாலத்தின் வழியாக வீதம்பட்டி கொசவம்பாளையம் ,
ஜே. என்பாளையம் வாகத்தொழவு , அரசூர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் உப்பாறு அணைக்கு அரசூர் ஷட்டர்
வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் நேற்று இரவு அதிகளவு
கன மழை பெய்த காரணத்தால் வாகத்தொழவு தரைப்பாலம் பகுதியில் தண்ணீர்
அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விட்டு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் , உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் போது வாகத்தொழுவு பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை மனுக்கள் வழங்கியும் ,
உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆய்வு கூட நடத்தப்படவில்லை இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு உயர் மட்ட பாலம் அமைக்க மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி