திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கார்த்திகை திருப்பதி திருவிழா சில வாரங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அகல் விளக்குகள் தயாரிக்க குளங்களிலிருந்து மண் எடுப்பதற்கான நடைமுறைகளை மாவட்ட நிர்வாகம் எளிமைபடுத்த வேண்டும், நலவாரியம் வாயிலாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சீசன் துவங்கும் முன் குறிப்பிட்ட அளவு மண் எடுத்தால் அதை இருப்பு வைத்து, சீசன் இல்லாத நிலையில் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.