திருப்பூர் மாவட்டம் உடுமலை கால்வாயில் தற்போழுது பாசனத்திற்கு தண்ணீர் சென்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில் ஜல்லிபட்டி ஒனாக்கல்லூர் பகுதியால் கால்வாயில் சிலர் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இதனால் தண்ணீரின் போக்குக்கு இடையூறு ஏற்படுத்த வருகிறது. இதன் காரணமாக சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் கடைமுறை வரை செல்வதில் தடைப்படுகிறது. எனவே அதிகாரிகள் குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.