திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் அபெக்ஸ் கிளப் சார்பில் 4 ஆம் ஆண்டு இலவச பொருட்கள் விநியோகத் திட்டம் நேற்று காலை தொடங்கியது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல நிலையில் உள்ள ஆடைகள் புத்தகங்கள் பள்ளி பேக்குகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் வைக்குமாறு கேட்டுக் கொள்ள கேட்டுக் கொண்டதற்குஇணங்க ஏராளமான உடைகள் மற்றும் பொருட்கள் மண்டபத்தில் குவிந்தன. இந்த நிலையில்
இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபத்திற்கு வருகை
தந்து தங்களுக்கு வேண்டிய உடைகள் மற்றும் மாணவர்கள் படிப்பதற்கு புத்தகங்களை இலவசமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் அபெக்ஸ் தேசிய தலைவர் பிரசாத் மாவட்ட ஆளுநர் ஜெயபால் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் உடுமலை அபெக்ஸ் தங்கத் தலைவர் கோவிந்தராஜன் உப தலைவர் சந்திரன் செயலாளர் பாலசுப்பிரமணியம் பொருளாளர் மவுன குருசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள், ராம்ய்யர் மண்டபம் அறக்கட்டளை சுப்புராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.