ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் இங்கு நீ குடியிருக்க கூடாது

74பார்த்தது
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சொந்த வீட்டில் குடியிருக்க கூடாது என மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.
திண்டுக்கல் மாவட்டம் சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அகிலாண்டபுரத்தில் சொந்தமாக ஓட்டு வீடு வாங்கி தனது குடும்பத்தினருடன் தங்கி வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் ஒன்றாக வசிக்கும் நிலையில் இந்தப் பகுதியில் ஏன் வீடு வாங்கினாய், வெளியூர் காரன் இங்கு ஏன் தங்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்து பிரச்சினைகள் செய்து வந்ததாகவும் எதிர் வீட்டைச் சேர்ந்த பெண் தங்கள் வீட்டின் முன்பாக கழிவுநீர் பானையை வைத்து பயன்படுத்தி வந்ததால் அதனை அகற்றக் கூறியபோது தங்களை தரக்குறைவாக பேசியதாகவும் இதனால் காங்கேயம் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் அளித்ததற்காக தன்னையும் தனது குடும்பத்தினரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டுவதாகவும் கடந்த 26ம் தேதி அப்பகுதி பெண் கவுன்சிலரின் கணவர் சிவக்குமார் மற்றும் எதிர் வீட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் அவரது மனைவி வனிதா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீட்டை காலி செய்ய வேண்டும் எனவும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாகவும் பேசி மிரட்டல் விடுத்ததால் ஸ்ரீதர் அவரது மனைவி

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி