திருப்பூர் லட்சுமி நகர் குலாலர் மண்டபம் அருகில் செயல் பட்டு வந்த திருப்பூர் வடக்கு தபால் நிலையம் கடந்த 15-ந் தேதி முதல் நெசவாளர் காலனி பஸ் நிறுத்தத்தில் சிட்டி யூனி யன் வங்கி முதல் தளத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் புதிய முகவரியில் அமைந்துள்ள தபால் நிலை யத்தில் அனைத்து அஞ்சலக சேவைகளை பெற்று பயன் பெறலாம். இந்த தகவலை திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு தெரிவித்துள்ளார்.