சிக்கண்ணா கல்லூரி நுழைவு வாயிலில் திடீரென விழுந்த பெயர் பலகை
திருப்பூர் கல்லூரி சாலையில் சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரி உள்ளது. கல்லூரியின் நுழைவு வாயிலில் டைல்ஸ் கற் கள் பதிக்கப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. நேற்று வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல நுழைவு வாயில் வழியாக வெளியேறி சாலையில் பஸ்சுக்காக காத்தி ருந்தனர். அப்போது நுழைவு வாயிலில் மேற்பகுதியில் உள்ள டைல்ஸ் கற்கள் உடைந்து கீழே விழுந்தது. கற்கள் விழும் போது மாணவர்கள் சுதாரித்துக்கொண்டு ஓடியதால் யாருக் கும் காயம் ஏற்படவில்லை.