பங்குச்சந்தையில் நேற்று திடீரென சரிந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயர்ந்து 79,377 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 24,017 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.