ஆட்டோ ஓட்ட வேண்டும் என்றால் சங்கத்துக்கு மாமுல் வேண்டும்

85பார்த்தது
புதிய ஆட்டோ மூன்று லட்சம் அந்த ஆட்டோவை ஊருக்குள் ஓட்ட ஒன்றரை லட்சம் என அடாவடி செய்யும் சங்கத்தினரால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகர் பகுதியில் ஆட்டோ நண்பர்கள் சங்கம் என்ற பெயரில் 80 பேர் சேர்ந்து சங்கம் அமைத்திருப்பதாகவும் அந்த சங்கத்தில் இல்லாதவர்கள் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்ட அனுமதிக்க மறுப்பதாகவும் தங்களை நகருக்கு வெளியே மட்டுமே ஓட்ட வேண்டும் என மிரட்டல் விடுத்து வருவதாகவும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதும் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புதிய ஆட்டோ வாங்க மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில் கூடுதலாக சங்கத்தில் சேர ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கொடுத்தால் மட்டுமே நகர் பகுதியில் ஓட்ட அனுமதிப்போம் என மிரட்டல் விடுத்து தங்களது வாழ்வாதாரத்தை சிதைத்து வருவதாகவும் கடந்த ஒரு ஆண்டாக ஆட்டோவை இயக்க விடாமல் பயணிகளை ஏற்றிச் சென்றால் பாதி வழியில் இறக்க சொல்லி தகராறு செய்வதால் வருமான வழியின்றி தவிப்பதாகவும் தங்களை நகர் பகுதியில் ஆட்டோ ஓட்ட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி