லாரியில் விறகு பாரம் ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம்

84பார்த்தது
லாரியில் விறகு பாரம் ஏற்றி வந்த டிரைவருக்கு அபராதம்
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் நேற்று காலை ஆறுமுகம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது அந்த வழியாக மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கர்நா டக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பூரில் உள்ள சாய ஆலைக்கு மரக்கட்டைகளை ஏற்றி வந்ததாக டிரைவர் கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து மரக்கட்டைகள் எந்த வகையானது என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் பறக்கும் படையினர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனிடம் தெரிவித்தனர். அதன்பிறகு வனத் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. வன சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன், வனவர் வெங்கடாசலம் சம்பந் தப்பட்ட லாரியில் உள்ள மரக்கட்டைகளை ஆய்வு செய்த போது அவை விறகுக்காக கொண்டு வரப்பட்ட மரக்கட்டைகள் என்பது உறுதியானது. ஆனால் லாரியில் விறகு கட்டைகளை கொண்டு வருவதற்கு எந்தவித பெர்மிட் ஆவணங்களும் டிரை வரிடம் இல்லை. இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் லாரி டிரைவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்திய பிறகு லாரியை விடுவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி