பின்னலாடை துறைக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்

84பார்த்தது
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் திருப்பூரில் 51ஆவது சர்வதேச பின்னலாடை கண்காட்சி செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது. இது தொடர்பான ஏற்றுமதியாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் குமரன் சாலையில் உள்ள தனியார் இடங்களில் நடைபெற்றது. இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் பேசுகையில்,

70 அரங்குகளில் கண்காட்சி நடைபெற உள்ளது எனவும், திருப்பூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தங்கள் ஆடைகளைக் காட்சிப்படுத்த உள்ளதாகவும் கண்காட்சியைக் காண ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பங்கு பெறும் எனவும், வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில் இயற்கைக்கு கேடு விளைவிக்காத ஆடைகள் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால் திருப்பூர் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. செயற்கை இழை ஆடைகளும் தற்போது அதிக அளவில் நுகரப்படுவதால் 20 முதல் 30 சதவீத செயற்கை இழை ஆடைகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி