தபால் வாக்குப்பதிவு செய்த கலெக்டர்அஞ்சல் வாக்கு

69பார்த்தது
தபால் வாக்குப்பதிவு செய்த கலெக்டர்அஞ்சல் வாக்கு



திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடு படும் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள், காவல்துறையினர் தபால் வாக்கு அளிக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலு வலகத்தில் நேற்று தபால் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிறிஸ்துராஜ், தனது வாக்கை தபால் வாக்காக பதிவு செய்து பெட்டியில் போட்டார். இதுபோல் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்கள் வாக்குகளை தபால் வாக்காக செலுத்தினார்கள். மாலை 6 மணி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பின்னர் தபால் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு திருச் சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மற்ற பகுதிகளில் இருந்து தபால் வாக்குகள் அனைத்தும் அங்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மாவட்டம் வாரியாக பிரித்து தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி