பெண்ணை கடைக்குள் புகுந்து தாக்கிய பா. ஜனதாவினர் மீது வழக்கு

65பார்த்தது
திருப்பூர் தொகுதி பா. ஜனதா வேட்பாளரை ஆதரித்து ஆத்துப் பாளையம் பகுதியில் பா. ஜனதாவினர் பிரசாரத்தில் ஈடுபட்ட னர். அப்போது அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ள சங் கீதா என்பவர், சானிடரி நாப்கினுக்கு கூட ஜி. எஸ். டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாக பா. ஜனதாவினரிடம் கேள்வி கேட்டது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சங்கீதாவின் கடைக்கு வந்த பா. ஜனதாவினர் அவரை மிரட்டிய தாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவ லைதளங்களில் வேகமாக பரவியது.
இதுபற்றி 15 வேலம்பாளையம் போலீசில் சங்கீதா அளித்த புகாரில், பா. ஜனதாவின் பிரசாரத்தின்போது கேள்வி கேட்ட தால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் எனது கடைக்கு வந்து தகாத வார்த்தைகளால் என்னை திட்டினர். சின்னசாமி என்ப வர் என்னை தாக்கினார். எனவே அவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். சங்கீதா அளித்த புகாரின் பேரில் சின்னச்சாமி உள்ளிட்டவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி