மது போதையில் தகராறு செய்து தாக்கிய நபரால் பரபரப்பு‌.

79பார்த்தது
போக்குவரத்து போலீசாரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்கிய நபரால் பரபரப்பு‌.

திருப்பூர் எஸ் ஏ பி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வந்த நிலையில் மது போதையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கரம் ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் போக்குவரத்து போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டி போக்குவரத்து போலீசாரின் கன்னத்தில் தாக்கினார். நீண்ட நேரம் பொறுத்து பார்த்த போலீசார் மது போதை ஆசாமி தாக்க துவங்கியதும் பிடித்து சாலை ஓரமாக அமர வைத்தனர். இதனையடுத்து
போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயன்ற போது போதை நபர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் போதை நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி