திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் இயந்திரங்கள் பழுதான காரணத்தால் சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு நிதி கிடைக்காததால் ஆலையை நவீனப்படுத்த முடியாமல் காலதாமதம் ஆகி வருகின்றது. எனவே தமிழக அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து நடப்பாண்டில் நவீனப்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் என அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.