திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3000 கன அடி நீர் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது அமராவதி அணையில் இருந்து 3715 கன அடி நீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.
மேலும் குதிரையாறு தண்ணீர் மற்றும் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் நீர் அமராவதி ஆற்றில் அதிகளவு செல்வதால், முன்பை விட அதிக அளவு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே பொதுமக்கள் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.