திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நான்காவது கூடுதல் நீதிமன்றம் நீதிபதி பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கோவை தலைமை குற்றவியல் நீதிபதியாக இருந்த ராஜலிங்கம் உடுமலை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் அல்லி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.