திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் வட்டாரத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகின்றது. தற்சமயம் கிணற்றுப் பாசனத்திற்கு தக்காளி கத்திரி மிளகாய் உள்ளிட்ட பயிர் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பருவமழை துவங்கி உள்ள நிலையில் தோட்டக்கலை பயிர்களில் பாதிப்பை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத் தொழிலின் அறிவுரை வழங்கி உள்ளனர். அதில் பருவமழை காலத்தில் பயிர் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வாழை மரவள்ளி சின்ன வெங்காயம் மிளகாய் தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரிய நேரத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்தனர்.