திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இன்று பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குளிப்பட்டி குருமலை ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது இதனால் அடிவாரம் பகுதியில அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் பூஜைகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.