எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளை கொஞ்சிய வீடியோ வைரல்

56பார்த்தது
காங்கேயம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளை கொஞ்சிய வீடியோ வைரல்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பரஞ்சேர் வழி ஊராட்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளரும்  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி. கே. பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார்  பின்னர் அருகே உள்ள கரிய காளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் சாமி கும்பிட காத்திருந்த தம்பதியினர் அவர்களின் குழந்தையை பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியிடம் கொடுத்து ஆசிப் பெற்றனர். அப்போது கையில் வாங்கிய குழந்தையை புன்சிரிப்புடன் கொஞ்சி மகிழ்ந்தார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என அவருடன் செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி