காங்கேயம் காளை சிலை அமைக்க உண்ணாவிரத போராட்டம்

59பார்த்தது
காங்கேயம் காளை சிலை அமைக்க உண்ணாவிரத போராட்டம்
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வரும் 27ம் தேதி காங்கேயம் காளை சிலை அமைக்க உண்ணாவிரத போராட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கட்சி ஒன்றிய, நகர நிர்வாகிகளை சந்தித்து அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். 

மேலும் காங்கேயம் காளை சிலை அமைக்க கடந்த 20 வருடங்களாக பல்வேறு முறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அமைச்சர், முதல் அமைச்சர், மத்திய அமைச்சர்கள் என பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித பலனும் இல்லை என்கின்றனர். 06.11.2020 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்த ஒன்றிய குழு தலைவர் காங்கேயம் காளை சிலை அமைக்க கோரி மனு வழங்கியதாகவும், அன்றே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் காங்கேயம் காளை சிலை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார். 

தேர்தலின் போதும் அனைத்து கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக காங்கேயம் காளை சிலை ரவுண்டானா பகுதியில் அமைக்கப்படும் எனவும் ஆட்சி அமைத்த பின் அதை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சேனாபதியை சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை வழங்கினார். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. ஜவஹர், திமுக நிர்வாகி வேலுசாமி உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி