வெள்ளக்கோவிலில் பாரம்பரிய நடனங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய பள்ளிக்கு உலக சாதனை புத்தகத்தில் இடம்
வெள்ளகோவில் மூலனூர் சாலையில் உள்ளது சத்யம் இன்டர்நேஷனல் பள்ளி இங்கு தமிழக பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் 401 மாணவர்கள் கலந்து கொண்டு 15 வகையான நடன கலைகள், யோகாசனம், வில்வித்தை , கண்கட்டிய தடிச்சண்டை, 5நிமிடத்திற்குள் அறிவியல் பெயர்களை கூறுதல், அரங்கேற்றம் செய்தனர். சிறுவர் சிறுமியர்கள், பாரத நாட்டியம், ஒயிலாட்டம், கோலாட்டம், குறவஞ்சி ஆட்டம், மயிலாட்டம், கலைக்கொத்துநடனம், மழைவேண்டி ஆட்டம், காரகத்தாட்டம், காவடி ஆட்டம், கும்மியாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், புலியாட்டம், பறையாட்டம், கிராமாமியா நடனம் ஆகியவைகளை நிகழ்த்திக்காட்டினார். இந்நிகழ்வானது கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் கலாம் உலக சாதனை நிறுவனத்தின் குமரவேல் சேர்மன் , ஐகிரிலோகேஷ் தலைமை நிர்வாக அதிகாரி சாதனைகளை ஆய்வு செய்து பதக்கங்களும், பாராட்டுச் சான்றுதழ்களும் வழங்கினார்.