திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூர் கழக திமுக சார்பில் முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர். இதில் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.