திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் மங்கை வள்ளி கும்மி கலை குழுவினர் சார்பில் குண்டடம். அரசு மேல்நிலைப்பள்ளி ருத்ராவதி பேருந்து நிலைய
மைதானத்தில் மங்கை வள்ளி கும்மி 110, வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா
நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் ஒரே இடத்தில் 300 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய மங்கை வள்ளி கும்மியாட்டம் ஆடி
விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர். இதைக் காண
தாராபுரம், குண்டடம் , சூரியநல்லூர் மேட்டுக்கடை தாயம் பாளையம். சங்கரன்டா பாளையம். வரப்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.
நிகழ்ச்சிக்கு
உலக சாதனை படைத்த ஆசிரியர் வெள்ளநத்தம்
பி. சண்முகசுந்தரம்
ஆசிரியர் தலைமை வகித்தார்.
மங்கை வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கையில் கொங்கு
மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. என பள்ளி கும்மியாட் ஆசிரியர் தெரிவித்தார்.