பொதுமக்கள் உண்ணாவிரதம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை

79பார்த்தது
பொதுமக்கள் உண்ணாவிரதம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை
பத்திரப் பதிவு தடை செய்ததை கண்டித்து அவினாசி ஒன்றி யம்செம்பிய நல்லூர் கிராமத்தில், பொதுமக்கள் தேர்தல் புறக் கணிப்பு மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங் கினர்இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது தாசில்தார் மூலம் ராயத்துவாரி பட்டாவாக செட்டில் மெண்ட் செய்யப்பட்ட இனாம் நிலங்களை வக்பு வாரியம் தங்களுடைய நிலம் என்று கூறிக் கொண்டு கடந்த 2022 -ம் ஆண்டு நவம் பர் மாதம் முதல் பத்திரப்பதிவு தடை செய்து பரிவர்த்தனை ஏதும் செய்யமுடியாத படி வைத்துள்ளனர். இனாம் ஒழிப்பு சட்டப்படி செட்டில்மெண்ட் பெறப்பட்ட நிலங்கள் எல்லாம் விவசாய நிலங்களாகவும், மனை இடங்களாகவும், குடியிருப்பு களாகவும் மாறி உள்ளது. இவற்றை எந்த ஒரு மூல ஆவ ணங்களும் இல்லாமல் வக்பு வாரியம் தடை செய்து வைத் துள்ளது.
இது குறித்து மனு கொடுத்தும் தடை நீக்காமல் தொடர்ந்து பிரச்சினை செய்துவருகின்றனர். இதனைக் கண்டித்து உடனடி யாக பிரச்சினையை தீர்க்கக்கோரி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத் துவதாக" தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அவினாசி தாசில்தார் மோகன் சம் பவ இடம் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதாக உறுதி கூறிய பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி