கோவில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி

70பார்த்தது
கோவில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி
அவினாசிலிங்கேசுவரர் கோவில் திருவிழாவில்
பரிவேட்டை நிகழ்ச்சி


திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வர லாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உட னமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் சித் திரை மாதத்தில் தேர்த்திருவிழா விமரி சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சி யளித்தல் வைபவம் நடந்தது. இதையடுத்து 21, 22-ந் தேதி களில் பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். 23-ந் தேதி சிறிய தேர் (அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நேற்று இரவு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (வியாழக்கிழமை) தெப்பத்தேர் திருவிழா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) தரிசன விழா வும் 27-ந் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி