ஸ்மோக் பிஸ்கட் விற்ற கடை மீது அதிகாரிகள் நடவடிக்கை

63பார்த்தது
ஸ்மோக் பிஸ்கட் விற்ற கடை மீது அதிகாரிகள் நடவடிக்கை
திரவ நைட்ரஜன் கொண்டு உருவாக்கப்படும், ஸ்மோக் பிஸ்கட்களை விற்பனை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்த கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இன்று(ஏப்.25) மதுரையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், ஸ்மோக் பிஸ்கட் விளம்பரங்களை கிழித்து அகற்றி, கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி