திருப்பூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை கல்லூரிக்கு விண்ணப்பிக்காத தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு இன்று 2-ம் கட்டமாக ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுவதால் தொழில் நிறுவனங்கள் தன்னார்வலர்கள் கல்வி வளர்ச்சி நிதி வழங்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.