கஞ்சா சாக்லெட் வைத்திருந்த பீகார் வாலிபர் கைது

51பார்த்தது
கஞ்சா சாக்லெட் வைத்திருந்த பீகார் வாலிபர் கைது
அவினாசி போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லட்சுமி சிங் மகன் அஜய் குமார் (வயது 21) என்பதும், அவர் வைத்திருந்த பையில் கஞ்சா சாக்லெட் மற்றும் புகையிலை பொருட்கள் வைத்திருப்பதும் தெரியவந் தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா சாக்லெட்டை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி