மழைக்கால சளிக்கு சித்தரத்தை சிறந்த தீர்வாக அமைகிறது. சித்தரத்தையை பொடி செய்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, கசாயம் போல் காய்ச்சி இறக்கி ஆற வைக்கவும். பின்னர் பசும் பாலை காய்ச்சி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். பால் இளம்சூடாக இருக்கும் போது பனங்கற்கண்டு மற்றும் சித்தரத்தை தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பருகலாம். சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு. உடல் வலியும் கட்டுப்படும்.