கிழக்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 31ஆம் தேதி (தீபாவளி தினம்) தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்., 31 மற்றும் நவ., 1ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் நவ., 1ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.