தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள யாகுத்புரா பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (அக்.28) இரவு பட்டாசு வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 2 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயனை அணைத்தனர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.