திருப்பதி கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கடந்த 4 ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இக்காலகட்டத்தில் ரூ.26 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட ரூ.2 கோடி அதிகமாகும். லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி சென்று வருகின்றனர்.