திருச்சி - விழுப்புரம் இடையே நாளை ரயில்கள் ரத்து

76பார்த்தது
திருச்சி - விழுப்புரம் இடையே நாளை ரயில்கள் ரத்து
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட திருச்சி - விழுப்புரம் ரயில் பாதையில் அமைந்துள்ள ஈச்சங்காடு - மாத்தூர் இடையே பொறியியல் பணிகள் புதன்கிழமை (பிப். 21) மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் நாளை(பிப். 21) முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

விருத்தாச்சலத்திலிருந்து காலை 6 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 06891), திருப்பாதிரிப்புலியூரிலிருந்து காலை 6. 05 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06889), திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்குப் புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 20666), சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2. 50 மணிக்கு திருநெல்வேலிக்குப் புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில்(வண்டி எண் 20665), திண்டுக்கலிலிருந்து காலை 5 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16868), விழுப்புரத்திலிருந்து மாலை 4. 50 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16867) புதன்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

டேக்ஸ் :