பட்ஜெட் அறிக்கை: அல்வா வழங்கிய நிர்மலா சீதாராமன்

65பார்த்தது
2024- 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 16) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சா் வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி