ஸ்ரீரங்கம் கோவில் திடீர் போராட்டம்

76பார்த்தது
ஸ்ரீரங்கம் கோவில் திடீர் போராட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் கம்பத்தடி ஆஞ்சனேயர் சிலையை ஏற்கெனவே இருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யக் கோரி திருமால் அடியார் குழாம் அமைப்பினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு குடமுழுக்கையொட்டி நடைபெற்ற பணியின்போது கொடிமரம் அருகே உள்ள கம்பத்தடி ஆஞ்சனேயர் சிலை கோயில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இருந்த இடத்திலேயே ஆஞ்சனேயர் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருமால் அடியார் குழாம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் 200- க்கும் மேற்பட்டோர் கொடிமரம் அருகே திரண்டு ஜால்ரா தட்டி, பெருமாள் பாடல்களை பாடியபடி போராட்டம் நடத்தினர். தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ மாரியப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், தேர்தலுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி