முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

83பார்த்தது
முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி மாத தேர்த்திருவிழா குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ஆரமுததேவசேனா தலைமை வகித்தார். கூட்டத்தில்
வரும் 1. 4. 2025 அன்று திருத்தேர் தலை அலங்காரம் ஏற்றும் முன்பு கீழே வைக்கப்பட்டுள்ள சாமி கூண்டின் மீது மாலைகள் போட வேண்டும் என்றும் தலையலங்காரம் ஏற்றியவுடன் உள் கரணை, நெட்டி மாலை, சேலைகள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு தேர் முழுமையாக கட்டப்படும் வரை தேரின் மீது ஏறி மாலைகள் போடக்கூடாது எனவும் ,
3. 4. 2025 அன்று திருத்தேரானது கோவிலில் இருந்து வீதி உலா புறப்படும் நேரம் மாலை 4 மணி என தீர்மானிக்கப்பட்டது , அருள்மிகு மதுரை காளியம்மன் கோயில் வீதி உலா செல்லும் அனைத்து இடங்களிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வீடியோ பதிவு செய்வது,
தொட்டியம் வட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினை திருவிழா நாட்களில் மூடக்கோரி காவல்துறையினர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து திருவிழா நடைபெறும் நாட்களில் விடுப்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்வது,
உயர்நீதிமன்ற உத்தரவின் படி எந்த ஒரு சாதி மத கொடிகள், சின்னங்கள் மற்றும் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி