திருச்சி மாநகராட்சியில் இன்று 2025- 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த நிகழ்வை அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன் அனுசியா ரவிசங்கர் ஆகியோர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாநகராட்சி அதிமுக தலைவர் அம்பிகாபதி, கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: -
திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை போக்கும் உயர் மட்ட மேம்பாலங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மத்திய மாநில அரசுகளின் எந்த மான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல் மாநகராட்சி மக்களின் வரிப்பணத்தை மட்டுமே வைத்து இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்கள் அதேபோன்று மாநகராட்சியில் இருந்து வரக்கூடிய வருவாய் அனைத்தையும் பஞ்சப்பூர் புதிய பஸ் நிலைய பணிகளுக்கு கொண்டு செல்கிறார்கள் எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம் அதே போன்று மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது அதிமுக கவுன்சிலர் அனுசியா ஆகியோர் உடன் இருந்தனர்.