திருச்சி மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

56பார்த்தது
திருச்சி மாநகராட்சியின் 2025 -2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேயர் மு. அன்பழகன் பேசியதாவது: -

பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கவுன்சிலர்களுக்கு போதிய நிதியை வழங்கிடுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்றார். அப்போது திடீரென்று எழுந்த அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி எங்கள் வார்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாக கூறியுள்ளீர்களே?. இதில் மத்திய அரசின் நிதியும் தானே இருக்கிறது. நீங்கள் செய்தது போல் ஏன் கூறுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போது திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் எழுந்து, அதிமுக கவுன்சிலர் மைக்கை பிடுங்குங்கள் என்று சத்தம் போட்டார். இதனைக் கேட்ட கவுன்சிலர் அம்பிகாபதி, நான் சொல்ல வேண்டிய கருத்தை கேட்காமல் மைக்கை பிடுங்குங்கள் என்று சொல்வது சரியா? என்று ஆவேசமாக பேசியபடியே மேயர் அருகில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு அவர் அங்கிருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் மற்றொரு அதிமுக கவுன்சிலரான அனுசுயா ரவிசங்கரும் வெளியேறினார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி