திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் தென்னூர் கே. அப்பாஸ் ஏற்பாட்டில் பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இக்ப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சாவூர் மண்டல செயலாளர் ஏ. அறிவொளி, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளர்கள் சி. அரவிந்தன், ஆர். ஜோதிவாளன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் வழக்கறிஞர் ஆர். வனிதா, வி. பத்மநாதன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கே. சி. பரமசிவம் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.