துறையூர் அருகே உள்ள புலிவலம் விண்ணம்மாள் கோவில் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக புலிவலம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது புலிவலத்தைச் சேர்ந்த தேவராஜ் சதீஷ் சீனிவாசன் ஆகிய மூவரும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.