உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் தனுஷ் இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்குள் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் நிலவுகிறது. சம்பவம் நடந்த நேற்று இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனுஷ் தாக்கியதில் தினேஷ்குமார் காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தை புகாரின் பேரில் அவரை தாக்கிய தனுஷ் மீது வழக்கு பதிந்து உப்பிலியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.