அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம். உறுதியாகத் தொடர்வோம். இதனை என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.