துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா அவர்கள் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் துறையூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் செலுத்தும் சொத்துவரி காலி மனை வரி குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களான கடை வாடகை குத்தகை தொகைகள் வசூல் உள்ளிட்டவைகளை கொண்டு நகராட்சி பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது.
பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய நீண்டகால நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டு நிலுவைகள் உட்பட சொத்து வரி 137 லட்சம் காலி மனை வரி 21. 11 லட்சம் குடிநீர் கட்டணம் 72. 46 லட்சம் தொழில்வரி 54. 96 லட்சம் கடை வாடகை மற்றும் குத்தகை தொகை 76. 49 ஆக கூடுதல் தொகை 366. 11லட்சம் ரூபாய் செலுத்தப்படாமல் பாக்கித் தொகையாக உள்ளது பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய பாக்கியத்தொகை விரைவாக செலுத்தி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் மேலும் வரி தொகையை செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.