மணப்பாறையில் உடைந்த பாலத்தின் கம்பிகளால் மக்கள் அச்சம்

85பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு நூலகம் 1வது குறுக்குத் தெரு நுழைவு வழியில் உள்ள பாலம் முற்றிலும் உடைந்துள்ளது. இந்த பாலம் சேதமடைந்து பல மாதங்களாகியும் இன்று வரை பாலம் சரி செய்யப்படாமல் கம்பிகள் வெளியே தெரிவதால் பொதுமக்கள் உயிர் பயத்துடன் சென்று வருகின்றனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி