சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் முதன் முறையாக ரத்த அழுத்தம் ஏற்படும். கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் 140/90 mmHg மற்றும் அதற்கு அதிகமாக வரையறுக்கப்படுகிறது. தோல்கள் சிவப்பு, கை கால்களில் வீக்கம், மூச்சுத் திணறல், வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், பார்வை மாற்றங்கள் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும். உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.