திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநகா் மாவட்ட செயலா் எஸ். சிவா, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநகா் மாவட்டச் செயலா் ஆா். ராஜா, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ். ராஜ்குமாா் ஆகியோா் தலைமையில் கெயிட்டி திரையரங்கம் முன்புள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் நோக்கி ஊா்வலம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் செல்வராஜ், மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா், மாா்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினா் ஸ்ரீதா் உள்ளிட்ட 300 போ் கலந்து கொண்டனா். ஊா்வலத்தின் நிறைவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 68 பெண்கள் உள்பட 229 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.